நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் உத்தரவின் படி;10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்க்காக மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 213 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 87 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 126 பேர் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.