நெல்லை: நெல்லை கேடிசி.,நகர் அருகில் உள்ள விஎம் சத்திரம் பகுதியில் செயல்பட்டுவந்த மதுபான கடை அருகே ஒரு குடோனில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சட்டம்-ஒழுங்கு சீனிவாசன்,மதுவிலக்கு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி,உதவி காவல் ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குடோனில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 1,200 குவார்ட்டர் பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக குடோன் உரிமையாளரான பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம்(53) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.