மதுரை: மகாலிபட்டி ரோடு நாகுபிள்ளை தோப்புவை சேர்ந்தவர் சீனிவாசன் (53) இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சைக்காக நிதி நிறுவனம் ஒன்றில் ரூ ஐம்பதாயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடனை சரியாக திருப்பிச்செலுத்த முடியவில்லை. நிதி நிறுவனம் கடனை கேட்டு அவரை தொந்தரவு செய்து மிரட்டி உள்ளனர். இதனால் மணமுடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவருடைய மனைவி குப்புமணி கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி