இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன் அவர்கள் மற்றும் ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் இணைந்து வழங்கினார்கள்.