திண்டுக்கல்: நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் செல்லமுத்து உதவியுடன் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள், காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.அபுதல்ஹா,திரு.ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா