சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து ஆலச்சம்பாளையத்தில் நேற்று நள்ளிரவில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களைஎடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பெரியதம்பிக்கு இரகசிய தகவல் வந்தது அதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ஆலச்சம்பாளையம் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு செங்கோடன் மகன் சீனிவாசன் வயது 35 என்பவரது வீட்டில் மது பாட்டில்களை திருட்டுதனமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் ஆலச்சம்பாளையம் காட்டூரில் சுப்பராயன் மகன் சக்திவேல் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் அங்கும் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது மொத்தம் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் 844 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் எடப்பாடி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து எடப்பாடி காவல்துறை ஆய்வாளர் பிராங்களின் உட்ரோ வில்சன் மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர்.