திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல் படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் தமிழகஅரசு வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் 24 ஆம் தேதி முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவிற்கு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு காரணமாக நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்கள் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் இந்நிலையில் இன்று திண்டுக்கல் சரி டி.ஐ.ஜி. முத்துசாமி, பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவ குடும்பங்கள் சுமார் 250 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.