திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அரியநாயகிபுரம், சுப்பிரமணியசுவாமி தெருவை சேர்ந்த பொன்னுகுட்டி என்பவரின் மகன் இசக்கி பாண்டி என்ற கார்த்திக், இவருக்கு முக்கூடல் காவல்நிலையத்தில்அடிதடி மற்றும் கொலை முயற்ச்சி வழக்கு உள்ளது.
இந்நிலையில் இசக்கி பாண்டி என்ற கார்த்திக்கிடம் நிர்வாகதுறை நடுவர் அவர்களால் , 1 வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் இசக்கிபாண்டி @ கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து 14.01.2022 ம் தேதி முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி, ஆயுதத்தை காட்டி மிரட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக உதவி ஆய்வாளர் திரு.ஆல்வின் அவர்கள், சேரன்மகாதேவி இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர் அவர்கள் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக இசக்கி பாண்டி என்ற கார்த்திக்கை 10 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.