மதுரை : பீபி குளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55) .பீபிகுளம் முல்லைநகரில் ஒயின்சாப் அருகே இருவரும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது பால்ராஜ் மதுபாட்டில் வாங்குவதற்கு ரஞ்சித் குமாரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த பால்ராஜ் ஒயின்ஷாப் அருகே ஓட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து ரஞ்சித் குமார் மீது ஊற்றினார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மீது எண்ணெயை ஊற்றிய நண்பர் பால்ராஜை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி