திருவள்ளூர்: அரியன் வாயல் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரிக்கை. மீஞ்சூர் பேரூராட்சியில் 2 வது அரியன் வாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நட்நிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களிடம் வார்டு உறுப்பினர் அபுபக்கர் கோரிக்கை மனு அளித்துள்ளார். இப்பள்ளியில் சுமார் 280 க்கும் மேற்பட்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருவதும் இப்பள்ளி தரம் உயர்த்த ருபாய் 1 லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்பட்டதும் போதிய வகுப்பறைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு