கோவை: கோவை துடியலூரை சேர்ந்தவர். செந்தில்குமார் 55 கணுவாய் – தடாகம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அப்போது அதே ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் சுப்பராய பட்டியைச் சேர்ந்த சின்னதுரை 27 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது …கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செந்தில்குமார் வேலையில் இருந்து நின்று விட்டார்.
நேற்று இரவு செந்தில்குமார் சின்னத்துரையை தேடிஅங்கு சென்றார. அப்போது செந்தில்குமார் குடிபோதையில் சின்னத்துரையை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை கூர்மையான இரும்பு ஆயுதத்தால் செந்தில்குமாரின்தலையில் ஓங்கி அறைந்தார் ,அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பின்னர் சின்னதுரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சின்ன தடாகம். காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் திரு.பால முரளி சுந்தரம் வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை இன்று காலை கைது செய்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.