குமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாலோட்டுவிளையை சேர்ந்தவர் செல்லன் 70. இவருடைய மகன் ரெஜிகுமார் 37. தொழிலாளி. ரெஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரெஜிகுமார் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டு செல்லனை தாக்கியதாக தெரிகிறது.
ஆத்திரம் அடைந்த செல்லன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து ரெஜிகுமாரின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரெஜிகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ரெஜிகுமாரின் அக்காள் ரெஜினிக்கு தெரியவர அவர் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ரெஜிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் திரு.முத்துக்குமரன் வழக்கு பதிவு செய்தார். களியக்காவிளை இன்ஸ்பெக்டர் திருமதி.எழிலரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, செல்லனை கைது செய்தனர்.