கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவ புரம் நந்தவனத்தை சேர்ந்தவர் விஜி 39 வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி .இவர் நேற்று இரவு மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது 3 ஆசாமிகள் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போன் , பணம் ரூ 700| ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து விஜி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .சப்-இன்ஸ்பெக்டர் திரு.செல்வநாயகம் வழக்குப்பதிவு செய்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூர்யா 20 அரவிந்த் 18 மகேஷ்குமார் 24 ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.