திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையில் சிலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரவளிபிரியா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா