திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் வாகன திருட்டு வழக்குகள் பற்றி மாவட்ட எஸ்.பி.திரு.ரவளி பிரியா நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ராஜசேகர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திரு.அபுதுல்ஹா, நகர் குற்ற தடுப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.நல்லதம்பி, திரு.வீரபாண்டி, காவலர்கள் திரு.ஜார்ஜ், திரு.ராதாகிருஷ்ணன், திருமுகமது அலி, திருவிசுவாசம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவிந்தாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த அய்யனார் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா