திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்லும் பெண்களிடம் தொடர்ந்து நகை பறிப்பு நடந்தது .மேலும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு நடந்தது.
தொடர்ந்து நடந்து வந்த நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. தனிப்படை அமைத்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
வத்தலக்குண்டுவை சேர்ந்த காட்டுராஜா என்பவரை நிலக்கோட்டை குற்றத்தடுப்பு சார்பு ஆய்வாளர் திரு.கண்ணகாந்தி கைது செய்து விசாரணை நடத்திவருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா