திருச்சி: திருச்சி மாநகரத்தில் கடந்த 01.12.22-ம்தேதி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் மீது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கும், சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும், வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடுடியதாக ஒரு வழக்கு உட்பட குற்றவாளி மீது 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது. எனவே, குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.