செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் பரிந்துரைத்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.A.R.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய (பொறுப்பு) காவல் ஆய்வாளர்
திருமதி.ஜெ.விஜயலட்சுமி அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவலில் புழல் சிறையில் அடைத்தார்.