திருநெல்வேலி: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படையினர் 20 பேர் ( ஆசாதி அம்ருத் மஹோத்ஸவம்) சைக்கிள் பேரணி மேற்கொண்டனர் 22-08-2021 ம் தேதி இன்று காலையில் கன்னியாகுமரியில் தொடங்கி மாலையில் நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு CRPF துனை கண்காணிப்பாளர் திரு.முகமது பயாஸ், ஆய்வாளர் திரு.ஐய்யப்பன் அவர்கள் தலைமையில் வந்தனர்.
CRPF வீரர்களை நெல்லை மாநகர துணை ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு) திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி அவர்கள், வரவேற்றார்கள்.இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள் திரு.ரமேஷ்கண்ணா, திரு.பேச்சிமுத்து, மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர்,திரு.டேனியல் கிருபாகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்வில் நோவா ஸ்போர்ட்ஸ் கழகம் திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகம் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மத்திய சிறப்பு காவல்படை அதிகாரிகள் மத்திய சிறப்பு காவல்படை திருநெல்வேலி சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.