தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்படி போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 114 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2,473 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.