தென்காசி: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர்.
தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறியதாவது;-மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு மீறல், பொது விதி மீறல்,குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், பொய்களைக் கூறி வாகனங்களில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.