திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஏ.வெள்ளோடு. இந்த கிராமத்தில் இன்று காலை அம்பாத்துரை சார்பு ஆய்வாளர் சின்னப்பன் வாகள தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதுஅவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான
வகையில் இருசக்கர வாகளத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார். அவர்கள் தாடிக்கொம்பு சேர்ந்த கிறிஸ்டோபர்,27, மறவபட்டியைச் சேர்ந்த பிரபாகரன்(21), என்பதும் தெரியவந்தது. மேலும் எவ்வித அனுமதியும் இல்லாமல் எப்.பி.எம்.எல். துப்பாக்கி. (நீளம் – 116 செ.மீ.) சாம்பல் கரிமருந்து-30 கிராம், பான்ரால் குண்டு – 100 கிராம். கருப்பு
கரிமருந்து 45 கிராம் ஆகியவவை அவர்களிடம் இருந்தது. இதை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் அனுமதியில்லாமல் மற்றும்
லைசென்ஸ் இல்லாமல் ஏராளமான துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் போலீசார் செல்லும்போது அவர்கள் தோட்டங்கள் காட்டுப்பகுதியில்
புதைத்து வைத்துவிட்டு மீண்டும் அவற்றை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்வது. சிறிய பிரச்சனைகளுக்கும் துப்பாக்கி எடுத்து மோதுவது .காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.