ஈரோடு : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசி மோகன், உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக போலீசார் உஷார் படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும் வடமாநிலத்தவர்களையும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு காவிரி ரெயில்வே பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.