ஈரோடு: சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரும்பள்ளம் அணை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் கே. என். பாளையம்,நரசாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், கருப்புசாமி என்பதும், இவர்கள் வனவிலங்கு வேட்டைக்கு, அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.