திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.ரவிச்சந்திரன், மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை முடிக்க வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு,கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திரு.மகேந்திரன் ஆகியோருக்கு அறிவுறுத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.