தர்மபுரி : தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (16.01.2024) தேதியில் தனியார் துணிக்கடை ஒன்றில் ரூபாய்1,46,2500/- களவு போனது இது தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை ஒன்று அமைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தனிப்படையானது மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து அவர்களிடம் ரூபாய்1,39,3790/- தொகையினை மீட்கப்பட்டது. அதனை (22.01.2024) தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் நேரில் சென்று விசாரணை விவரம் கைப்பற்றப்பட்ட தொகை மற்றும் குற்றவாளிகளை பார்வையிட்டார். உடன் நகர காவல் ஆய்வாளர் திரு.வேலுதேவன், காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜய் சங்கர், செல்வி.இளமதி மற்றும் தலைமை காவலர் திரு.சந்திரசேகர் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தை செய்த நபர்கள் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் 01).பரத்குமார் மற்றும் 02).மோகன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பப்பட்டனர்.