கரூர்: சிவகிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் முன்பு வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு பணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு மேலும் பரவாமல் தடுப்பது என்பது குறித்து நிலைய அலுவலர் போக்குவரத்து திரு.பார்வதிநாதன், திரு.மாடசாமி, திரு.ராஜா, திரு.முனியாண்டி, திரு.ராஜதுரை, திரு.கதிரேசன் ஆகியோர் செய்து காட்டினர்.