நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தினை முழுமையாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்திரவுப்படி, நாகப்பட்டினம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில், (21.07.2023), ஆம் தேதி நடத்தப்பட்ட கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிரான வேட்டையில் ஜெல்சன் (21/23) த/பெ. வில்லியம், என்பவர் சட்டவிரோதமாக காரைக்கால் பகுதியிலிருந்து பாண்டி மதுபாட்டில்கள் 90 மிலி அளவுள்ள 750 மதுபாட்டில்களும் மற்றும் 55 லி பாண்டி விஷ சாராயமும், பதிவு எண். TN 70 A 1500 TVS அப்பாச்சி என்ற இருசக்கர வாகனம் மூலம் கடத்தல் ஈடுபட்ட மேற்படி நபரை கைது செய்து நாகப்பட்டினம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.