கன்னியாகுமரி: மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே கூட்டம் சேருவதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவுபடி இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே கூட்டம் சேருவதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவுபடி இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நாகர்கோவில்,மார்த்தாண்டம் உட்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தும் முற்றிலும் வெறிச்சோடி காணப்பட்டது.திருமண விழாக்களில் கலந்து கொள்ள செல்வோர்கள் மட்டும் கிடுக்குபிடி விசாரணைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.