திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தைச், சேர்ந்த புதுரான் மகன், கெடார் (எ) சுப்ரமணி, வயது 55 என்பவர், கள்ளச்சாராயம் விற்ற குற்றத்திற்காக கலசபாக்கம் காவல் ஆய்வாளர் திரு. N. ஜனார்த்தனன் அவர்கள் கைது செய்து, கலசபாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள், கெடர்(எ) சுப்ரமணியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.