மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சங்கரன்கோவிலில் இருந்து மாட்டுத்தாவணி நோக்கி வந்த லாரியும் , பரவையிலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்த காய்கறிகள் ஏற்றிக்கொண்ட சரக்கு லாரியும் ,
கப்பலூர் அருகே மேம்பாலத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில், எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் , சங்கரன்கோவிலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணன்(49) உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார் . மற்றொரு லாரியில் வந்த ஓட்டுநர் (வேல்பாண்டி) மற்றும் கிளீனர் (ஆரோக்கியா)ஆகிய இருவர் படுகாயம் அடைந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இவ்விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி