திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் உட்கோட்டங்களில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருப்பத்தூர் நகரத்தில் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கி, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜார் வழியாக நகர காவல் நிலையம் வரை அணிவகுப்பு நடைபெற்றது.
ஆம்பூர் நகரத்தில் பேருந்து நிலையத்தில் தொடங்கி, உமர் ரோடு, காளியம்மன் கோயில் தெரு, பஜார், நேதாஜி ரோடு வழியாக மீண்டும் பேருந்து நிலையம் வரை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், துணை ராணுவத்தினர் மற்றும் தெலுங்கானா காவல்துறையினர் கலந்து கொண்டு, தேர்தல் கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.




















