திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு வகுப்பு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டியது தொடர்பாகவும் , குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டியது தொடர்பாகவும், உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.மலைச்சாமி, காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி