கரூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலூரை சேர்ந்த செந்தில்குமார் 32. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் திருநங்கைகள் இசைப்பிரியா 24. ராகவி 27. தில்ஷிகா 23. இனியா 22. ஆகிய 4 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கசங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த ரூ.27 ஆயிரத்து 500-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து செந்தில்குமார் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திருநங்கைகள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பவுன் தங்கசங்கிலி, ரூ.27 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டன.