குமரி: குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது நகைக்கடையில் மர்மநபர் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.அப்போது அங்கிருந்த அபாய மணி அடிக்கவே மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கொல்லங்கோடு எஸ்.ஐ.ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் கடையை உடைத்து திருட முயன்றது மார்த்தாண்டம் துறையை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் மகன் பாபு (34) என்பது தெரியவந்தது போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் பாராட்டியுள்ளார்.