பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் நீதிபதி (36). என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது வீட்டினுள் நுழைந்து கருப்பசாமி த/பெ பால்ராஜ் பெரியார் நகர் செந்துறை அரியலூர் மாவட்டம். என்பவர் திருடிக் கொண்டிருக்கும் பொழுது அவரை பிடித்து நிலையம் அழைத்து வந்து மேற்படி நீதிபதி என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்து மேற்படி குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து வழக்கு குன்னம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் (30.10.23) ம் தேதி மேற்படி வழக்கினை விசாரித்த குன்னம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் திருமதி.S.கவிதா அவர்கள் மேற்படி குற்றவாளியின் குற்றத்தை உறுதிப்படுத்தி அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 100.ரூபாய் அபராதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை என்றும் விதித்து தீர்ப்பளித்தார்.மேற்படி குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த குன்னம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் மற்றும் குன்னம் நீதிமன்ற முதல்நிலை காவலர் 494 திருமதி.அமராவதி ஆகியோர்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்யாம்ளா தேவி அவர்கள், வெகுவாக பாராட்டினார்கள்.