இராமநாதபுரம் : இராமநாதபுரம் அரன்மனையில் நடந்த, இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பதவி நீக்கத்தை கண்டித்தும் பாசிச பாஜக சர்வாதிகார அரசின் அடக்குமுறையை கண்டித்தும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத்தின் பொறுப்பு குழு தலைவர் மரியாதைக்குரிய தெய்வேந்திரன் அவர்கள் தலைமையில், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில், இந்திய முஸ்லிம் லீக் தேசிய துணை தலைவர் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.நவாஸ்கனி அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களும் ,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.கருமாணிக்கம் அவர்கள்,காங்கிரஸ் கட்சியின் மற்றும் பொறுப்பு குழு உறுப்பினர்கள், கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி