திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களின் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுஞ்சி மற்றும் மன்னவனூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன் (52), குழந்தைவேல் (63), பாலசுப்பிரமணி (37), ஆனந்தன் (51), ராஜேந்திரன் (53) ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5.500 kg கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரைக்காபட்டி அருகே காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சோதனை செய்த போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பாண்டி (36) என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 kg கஞ்சா பறிமுதல் செய்தனர்.
10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் தலைமையில் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு.ரவி சங்கர் அவர்கள் முதல்நிலை காவலர் திரு.ஜெய் ஸ்டாலின், காவலர் திரு.ரவி ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில் வேடசந்தூர் அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சகுந்தலா (34) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் திண்டுக்கல் N.G.O காலனியைச் சேர்ந்த சத்யா (28) என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து சத்யா வீட்டில் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக விக்னேஷ் (26) என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.