தேனி: தேனி மாவட்ட ஆயுதப்படை, வாகனப்பிரிவு மற்றும் மாவட்ட காவல் அலுவலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வருகைபுரிந்த திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா,IPS., அவர்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,IPS., அவர்கள் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆய்வாளர் திரு.k.செந்தில்குமார் அவர்களின் தலைமையிலான காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கவாத்து பயிற்சி, உடைபொருள் தணிக்கை, வாகன பிரிவு மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டதையடுத்து மரக்கன்றுகள் நட்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்தும் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.