திண்டுக்கல்: மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா (21)கேட்டரிங் படித்துவிட்டு சிறுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மூங்கில்பட்டி முல்லைநகரை சேர்ந்த ராசு மகள் பரமேஸ்வரி(20) – யும் 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்த விபரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து பரமேஸ்வரியை அவரது பெற்றோர்கள் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதை தனது காதலன் பாரதிராஜாவிற்கு பரமேஸ்வரி தெரிவித்தார்.இதை அறிந்த காதலன் பாரதிராஜா மூங்கில்பட்டி முல்லை நகர் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் நண்பர்களுடன் நேற்று சென்றார்.
அங்கு பரமேஸ்வரியை தொடர்புகொண்டு வரச் சொல்லி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதையறிந்த பரமேஸ்வரியின் பெற்றோர்கள், அண்ணன் மலைச்சாமி மற்றும் உறவினர்கள் ஆகியோர் தங்கள் வீட்டு அருகே நினேறு கொண்டிரருந்த பாரதிராஜாவுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த மலைச்சாமி அருகில் இருந்த கல்லை எடுத்து பாரதிராஜாவை தாக்கியுள்ளார்.
உயிருக்கு போராடிய பாரதிராஜாவை 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினர். ஆனால் போகும் வழியிலேயே அவர இறந்துவிட்டார். தகவலறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இன்று காதலியின் தந்தை
ராசு(63), தாய் அழகுநாச்சி(58), அண்ணன்கள் மலைச்சாமி(33), பாலகுமார்(28) ஆகியோரை டிஎஸ்பி.சுகுமாறன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் காவலர்கள் கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா