திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் உத்தரவின்பேரில் ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ரவுடி சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் கைத்துப்பாக்கியுடன் ரோந்து செல்லுமாறு எஸ்பி அறிவுறுத்தியதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கியுடன் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்களை தடுத்து நிறுத்தி தோடுகளை கழட்ட வைத்து, முடியை ஒழுங்காக வெட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார் மேலும் திண்டுக்கல்லில் உள்ள சலூன் கடைக்காரர்கள் தேவையில்லாமல் ஒழுங்கற்ற முறையில் கலர் கொடுத்து (புள்ளிங்கோ ஸ்டைலில்) முடி வெட்டுவது, ரவுடி கெட்டப்பில் முடி வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.