திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்துள்ள அச்சராஜாக்காப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா, 23 .இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். மாலப்பட்டியை சேர்ந்தவர்கள் கங்காதரன், சிரஞ்சீவி, முருகேசன் இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள்.
நான்கு பேரும் சேர்ந்து மதுபானம் வாங்கி மாலப்பட்டி பிரிவு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது சம்பளம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பிகளான சிரஞ்சீவி மற்றும் முருகேசன் சேர்ந்து கருப்பையா, கங்காதரன் ஆகியோர் கத்தியால் குத்தி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .வரும் வழியில் கருப்பையா பரிதாபமாக உயிர் இழந்தார்.
படுகாயமடைந்த கங்காதரன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே குடிபோதையில் நண்பர்கள் பெயிண்டரை கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்