திண்டுக்கல்: திண்டுக்கல் டி.ஐ.ஜி திரு. எம்எஸ் முத்துசாமி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பதவி ஏற்றார் இவர் ஏற்கனவே திண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்தவர். இந்நிலையில் இவர் திண்டுக்கல் மக்களுடன் நெருங்கிப் பழகியவர். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்நின்று தீர்க்கக் கூடியவர்.
போக்குவரத்து நெரிசலை கூட தானே நேரில் வந்து சரி செய்யக்கூடியவர். மக்களுக்கான மருத்துவ முகாம், மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி உட்பட நல்ல நிகழ்ச்சிகளுக்கு உடனே பங்கேற்று விடுவார்.
இந்நிலையில் திண்டுக்கல் டி.ஐ.ஜி திரு.முத்துச்சாமி கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திண்டுக்கல் லுக்கு புதிய டி.ஐ.ஜி.யாக திரு. விஜயகுமாரி நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் முதல் பெண் டி.ஐ.ஜியாக திரு.விஜயகுமாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை பெண் டி.ஐ.ஜி நியமிக்கப்படாத நிலையில் முதல் முறையாக பெண் டி.ஐ.ஜி நியமிக்கப்பட்டுள்ளது பெருமைப்படத்தக்கதாகும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா