திருப்பூர் : திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் திரு.ஜெயபால் (கா எண் 866) என்பவர் ரோந்து பணியில் இருக்கும் போது ஒரு சிறுவன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டான் அவனை அழைத்து அந்த காவலர் விசாரணை செய்தார். விசாரணையில் அந்த சிறுவன் அம்மாவிடம் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்ததாக கூறினான். அவனை அழைத்த காவலர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்தார்.பிறகு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அச்சிறுவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆய்வாளர் அவர்கள் உத்தரவுப்படி சிறுவனை பாலையக்காடு பகுதியில் உள்ள சஞ்சய் நகரில் அவரது அம்மா வசந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார் (IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.