திருவண்ணாமலை: போளூரை சேர்ந்தவர் முனியசாமி இவரது மனைவி விஜயா(55) இவரது மகன் அன்பு என்ற அன்பழகன்(39)இவர் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தாயார் விஜயாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை செலவுக்கு பணம் கேட்டு சண்டைபோடுட்டுள்ளார்.அப்போது அன்பழகன் அருகிலிருந்த சுத்தியலை எடுத்து தாயின் தலையில் அடித்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விஜயாவின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்து அன்பழகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.