திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள சின்ன மாங்காடு கிராமத்தில் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முதலைமைசராக வேண்டி பூங்குளம் ஊராட்சி பொறுப்பாளர் சிவலிங்கம் மற்றும் தவெகவினர் உடல் முழுவதும் விஜய் படம் பொருந்திய ஸ்டிக்கர் படங்களை அலகு குத்தி தீ குண்டத்தில் இறங்கினர். பொதுவாக வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு முருகனுக்கு வேல் தரித்தல் எனும் நிகழ்வில் விரதம் இருப்பது,காவடி எடுப்பதுடன் வேல் தரிப்பது எனும் நிகழ்வில் உடலில் ஊசியால் பூ, பழம், முருகனுக்கு படைக்கும் உணவுப் பொருட்கள் என தைத்து ஊர்வலமாக சென்று தீக்குண்டத்தில் இறங்கி வழிபடுவார்கள். இதில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக ஆகவேண்டும் என முருகனை வேண்டி அறுபது விஜய் உருவப்படம் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர்களை உடலில் தைத்து வேண்டுதலை நிறைவேற்ற விஜயின் தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வினை தவெக தலைவர் விஜய் பார்த்து தெரிந்து கொண்டால் அதுவே தங்களது நேர்த்திக்கடனாகும் என தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு