குமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காணிக்கை மாதா கோவில் திருவிழாவின்போது குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடைய குழந்தையின் சுமார் அரை பவுன் செயின் தவறியது. அப்போது அங்கு பணியில் இருந்த குளச்சல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மரியநெல்சன் என்பவர் அதனை கண்டெடுத்து அதை தவறவிட்ட பிரவீன்குமாரிடம் விசாரித்து ஒப்படைக்கப்பட்டது. தவறவிட்ட செயினை கண்டுபிடித்துக் கொடுத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.