தென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து வித கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கான இன்று போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளன