இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் (07/11/2022), கடந்த 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்த 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, திரு.சங்கர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), திரு. இளங்கோ (திமிரி காவல் நிலையம்) , திரு. மணி (வழைப்பந்தல் காவல் நிலையம்), திரு. வேலுமணி (மது அமலாக்கப்பிரிவு) திரு. தியாகராஜன் ( இராணிப்பேட்டை காவல் நிலையம்) , திரு. பழனிவேல் (திமிரி காவல் நிலையம்) , திரு.சுரேஷ் பாபு (ஆற்காடு நகர காவல் நிலையம்), திரு. வெங்கடேசன் (நெமிலி காவல் நிலையம்), திரு. துறைவேலன் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்) , திரு. செல்வம் (திமிரி காவல் நிலையம்), திருமதி. கவிதா, திருமதி. சித்ரா, (இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்), திருமதி. புஷ்பா, திருமதி. வரலட்சுமி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திருமதி. செல்வி (நெமிலி காவல் நிலையம்) , திருமதி. ஜான்சிராணி (அரக்கோணம் காவல் நிலையம்), திருமதி. ஜோதி (அவலூர் காவல் நிலையம்) ஆகிய 17 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.
உடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) அவர்கள், முத்துக்கருப்பன் (இணையவழி குற்றப் பிரிவு) அவர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜசங்கர் ( மாவட்ட குற்ற ஆய்வு காப்பகம்) ஆகியோர் இருந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாழ்த்து பெற்ற அரக்கோணம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர்கள் திரு. துரைவேலன், திருமதி. ஜான்சி ராணி/ மற்றும் நெமிலி காவல் நிலைய தலைமை காவலர்கள் திரு. வெங்கடேசன் மற்றும் திருமதி. செல்வி ஆகியோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. உஷ்டா கிரிஷ் அசோக் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்