தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வினோத் (29), என்பவர் கடந்த 2016 மே-9ல் (14), வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது சம்பந்தமாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வினோத்தை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது மேலும் 21 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 13,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.